
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் அ.தி.மு.க., சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன்துவக்கி வைத்தார். மாநில துணை செயலாளர் குமுதன் தலைமை தாங்கினார். ரவி பாண்டுரங்கன், இணை செயலாளர் திருநாவுக்கரவு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், பயனாளிகளுக்கு இலசமாக மருந்து மாத்திரைகள், கண் கண்ணாடி, வாக்கர் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ்வேந்தன், தொகுதி அவைத் தலைவர் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் சிவராமராஜா, முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.