/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடற்கரையில் குளிப்பதை தடை செய்ய வலியுறுத்தல்
/
கடற்கரையில் குளிப்பதை தடை செய்ய வலியுறுத்தல்
ADDED : ஆக 18, 2025 04:06 AM
புதுச்சேரி: கடற்கரையில் குளிப்பதை தடை செய்ய வேண்டும் என, மக்கள் முன்னேற்ற கழக கட்சி தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரிக்கு சுற்றுலாவந்தவர்கள் சின்ன வீராம்பட்டினம்கடற்கரையில் குளித்தபோது அலையில் சிக்கி மூவர் இறந்னர். இருவர் உயிருக்குப் போராடிக் கொண்டு இருப்பது வருந்தத்தக்க நிகழ்வாகும். இந்த இளைஞர்கள் கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மாநிலங்களைச் சார்ந்தவர்கள். கடற்கரை பகுதிகளில் சரியாக கண்காணிப்பு இல்லாததால் ஏற்பட்ட விளைவு தான் இது.
சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் இவ்வாறு இறப்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக மாறி வருகிறது. அப்போது மட்டும் இரண்டு நாள் கடற்கரையில் காவல் இருந்துவிட்டு, பிறகு பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் உள்ளது தான் இப்படிப்பட்ட துயர சம்பவங்களுக்கு காரணம்.
சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்எனில், சுற்றுலாப் பாதுகாப்புப் பிரிவு ஒன்றை காவல்துறையில் உருவாக்க வேண்டும்.கடற்கரை உள்ள இடங்களில் வெளிப்புறக் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும்.கடற்கரையில் குளிப்பதை முழுவதுமாக தடை செய்தால் தான் இறப்புகள் தடுக்கப்படும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

