sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வெள்ளை நிற பைகளில் இலவச அரிசி விநியோகம்

 வெள்ளை நிற பைகளில் இலவச அரிசி விநியோகம்

 வெள்ளை நிற பைகளில் இலவச அரிசி விநியோகம்


ADDED : மார் 20, 2026 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 07:32 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி எந்த படம் மற்றும் வாசகங்கள் இல்லாமல் வெள்ளை நிற பைகளில் விநியோகம் செய்யப்பட உள்ளன.

புதுச்சேரி அரசு சார்பில், மஞ்சள் மற்றும் சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு தலா 10 மற்றும் 20 கிலோ அரிசி மூட்டைகள் மாநிலம் முழுதும் உள்ள ரேஷன் கடைகளில் இலவசமாக கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது.

ஒவ்வொரு மாதமும் தட்டாஞ்சாவடியில் உள்ள கான்பெட் அலுவலகத்திற்கு லாரியில் வரும் 5,000 டன் அரிசி மூட்டைகளை அலுவலக அதிகாரிகள் தரம் பரிசோதித்த பின்பு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி, விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், இலவச அரிசி மூட்டைகளில் இருந்த, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் படங்கள் மற்றும் இலவச அரிசி என்ற வாங்கியம் ஆகியவற்றை கலர் பேப்பர் ஒட்டி மறைக்கப்பட்டது.

தொடர்ந்து, நேற்று புதிதாக வந்த அரிசி மூட்டைகள் எந்த படங்கள் மற்றும் வாசகங்கள் இல்லாமல் வெள்ளை நிற பைகளில் லாரிகள் மூலம் கான்பெட் நிறுவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us