/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பணிக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்
/
அரசு பணிக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்
அரசு பணிக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்
அரசு பணிக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்
ADDED : ஆக 26, 2025 06:44 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் காலியாக உள்ள எல்.டி.சி., யு.டி.சி., எஸ்.ஐ., போலீஸ் கான்ஸ்டாபிள், வி.ஏ.ஒ., உள்ளிட்ட பல்வேறு அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பட உள்ளன.
இதையொட்டி, உருளையன்பேட்டை தொகுதி பா.ஜ., பொறுப்பாளரும், மோடி மக்கள் சேவை மைய நிறுவனருமான பிரபுதாஸ் ஏற்பாட்டில், சக்தி கோச்சிங் சென்டர் சார்பில் தொகுதியை சேர்ந்த இளைஞர்கள் அரசு பணியில் சேர்வதற்கான இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி பஸ் நிலையம் பின்புறம் உள்ள மதர் குளேரி கோச்சிங் சென்டரில் துவங்கிய சிறப்பு பயிற்சி வகுப்பை பிரபுதாஸ் துவக்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி கையேடுகளை வழங்கினார்.
சக்தி கோச்சிங் சென்டர் தாளாளர் முரளி பேசுகையில், இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரையிலும், மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை நடக்கிறது. இந்த வாய்ப்பை மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
மதர் குளேரி கோச்சிங் சென்டரின் தாளாளரும், பா.ஜ., தொகுதி பொதுச் செயலாளருமான ராபர்ட் கிளைவ், புதுச்சேரியில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை, அதை தொகுதியை சேர்ந்த இளைஞர்கள் எவ்வாறு பெறுவது குறித்து எடுத்துரைத்தார்.
இதில், பன்னீர்செல்வம், ஆசிரியர்கள் தங்கராஜ், ஜார்ஜ், கபில் ஆகியோர் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.