/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆர்ச்சிட் பிசியோதெரபி மையத்தில் இலவச சிகிச்சை முகாம்
/
ஆர்ச்சிட் பிசியோதெரபி மையத்தில் இலவச சிகிச்சை முகாம்
ஆர்ச்சிட் பிசியோதெரபி மையத்தில் இலவச சிகிச்சை முகாம்
ஆர்ச்சிட் பிசியோதெரபி மையத்தில் இலவச சிகிச்சை முகாம்
ADDED : செப் 07, 2025 11:10 PM

புதுச்சேரி: உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு, முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள ஆர்ச்சிட் பிசியோதெரபி மையத்தில் இலவச பிசியோதெரபி முகாம் நேற்று நடந்தது.
முகாமில் எலும்பு, மூட்டு சம்பந்தமான பிரச்னைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளித்தபிசியோதெரபி நிபுணர் ராஜாகூறியதாவது:
எலும்பு, மூட்டு நோய் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. பெண்கள் எலும்பு, மூட்டு நோய்கள் சம்பந்தமாக அதிக பிரச்னைகளை சந்திக்கின்றனர். மாதவிடாய் நின்ற பிறகு எலும்புகள் பலவீனமடைந்து விடுவதே இதற்கு காரணம்.
மூட்டுகளில் குருத்தெலும்பு தேய்மானம் அடைவதற்கு கால்சியம் குறைபாடு தான் முக்கிய காரணம். ஆனால் எலும்பு தேய்மானம், பிசியோதெரபி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க, மூட்டு தேய்மானத்தை தவிர்க்க பிசியோதெரபி உதவும்.
இதேபோல் முழங்கால் தசைகளை வலுபடுத்தவும் உதவும். ஆரம்ப நிலையில் உள்ள எலும்பு மற்றும் மூட்டு நோயை பிசியோதெரபி மூலம் குணப்படுத்தலாம். இந்த பிரச்னைக்காக அதிக அளவில் பல நாட்களுக்கு மருந்துகளை உட்கொண்டால் சிக்கல் தான்.
சிறுநீரகப் பிரச்னை, இரப்பை அழற்சி, குடல் மற்றும் வயிற்றுப்புண் ஏற்படும். ஒரு கட்டத்திற்கு மேல், மருந்துகளை குறைத்து பிசியோதெரபி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பெரும்பாலான எலும்பு, மூட்டு பிரச்னைகளுக்கு பிசியோதெரபி தான் சிறந்தது.
இப்பிரச்னைகளை, மருந்துகள் அற்ற பிசியோதெரபி மூலம் சரி செய்ய முடியும். ஆலோசனைக்கு 95007-12391 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.