/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரான்ஸ் மூதாட்டி சாவு: போலீஸ் விசாரணை
/
பிரான்ஸ் மூதாட்டி சாவு: போலீஸ் விசாரணை
ADDED : நவ 24, 2024 05:13 AM
வானுார்,: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மூதாட்டி இறந்தது குறித்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் மேன்டவுட், 70; இவர் ஆரோவில் அருகே பிச்சாண்டிகுளத்தில் இருந்து சின்ன கோட்டக்குப்பம் செல்லும் சாலையில் உள்ள, பெரிய முதலியார்சாவடியை சேர்ந்த முருகன் என்பவரது வீட்டில் 7 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
தனியாக தங்கியிருந்த அவரை, கடந்த 21ம் தேதி, முருகன் பார்த்து பேசி விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மூதாட்டி மேன்டவுட் இறந்து கிடந்தார்.
ஆரோவில் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

