தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரிக்கு வெள்ளியை சுமந்து வந்த பிரெஞ்சு கப்பல்கள்... ஆங்கிலேயர்களை பொறாமைப்பட வைத்த வரலாறு

புதுச்சேரிக்கு வெள்ளியை சுமந்து வந்த பிரெஞ்சு கப்பல்கள்... ஆங்கிலேயர்களை பொறாமைப்பட வைத்த வரலாறு

புதுச்சேரிக்கு வெள்ளியை சுமந்து வந்த பிரெஞ்சு கப்பல்கள்... ஆங்கிலேயர்களை பொறாமைப்பட வைத்த வரலாறு


UPDATED : அக் 17, 2026 04:59 PM

ADDED : அக் 17, 2026 04:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 04:59 PM ADDED : அக் 17, 2026 04:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘பணம் பந்தியிலே... வெள்ளி சந்தையிலே.. - இன்றைக்குத் தங்கம், வெள்ளிக்கான டிமாண்ட் எப்படியோ, அதேபோல 300 ஆண்டுகளுக்கு முன்பும் வெள்ளிக்கான மவுசு உச்சத்தில் இருந்தது. அதிலும் பிரான்சுக்கும் புதுச்சேரிக்கும் இடையே நடந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வெள்ளி பிசினஸ்’ இருக்கிறதே... அது செம இன்ட்ரஸ்டிங்..

18-ம் நுாற்றாண்டின் தொடக்கம்... 1701-ம் ஆண்டுவாக்கில் ஐரோப்பா முழுமைக்குமே வெள்ளியை அள்ளி அள்ளி வழங்கி அசத்திக் கொண்டிருந்தது புது உலகத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாடு. பிரெஞ்சு நிறுவனத்தின் பிரம்மாண்டக் கப்பல்கள், ஸ்பெயினின் புகழ்பெற்ற காதிஸ் துறைமுகத்திலிருந்து டன் கணக்கில் வெள்ளியை ஏற்றிக்கொண்டு புதுச்சேரியை நோக்கிப் புறப்பட்டன.

நோக்கம் என்னவோ ஒன்றுதான்... புதுச்சேரியில் களைகட்டி வந்த ஜவுளி வர்த்தகத்தில் பெருமளவு முதலீடு செய்வதுதான்..

ஆனால், இதில் ஒரு மிகப்பெரிய ‘ட்விஸ்ட்’ இருந்தது. அப்போது பிரெஞ்சு நிறுவனத்துக்குச் சொந்தமாக நாணயங்களை அச்சடிக்கும் வெளியிடும் அதிகாரம் கிடையாது. இதனால், இறக்குமதி செய்த வெள்ளியை வைத்து என்ன செய்வது எனப் புதுச்சேரியில் ஒரே குழப்பமும் சிக்கலும் நீடித்தது. இந்தச் சிக்கலைச் சமாளிக்க பிரெஞ்சுகாரர்கள் ஒரு அட்டகாசமான ஐடியா செய்தார்கள்.

புதுச்சேரிக்கு அருகில் இருந்த ஆலம்பரவையில் முகலாயர்களின் தங்க சாலை இயங்கி வந்தது. வெள்ளியை நேராக அங்கே அனுப்ப வேண்டியதுதான்.

அங்கிருந்த முகலாய ஆளுநரின் உதவியோடு வெள்ளி நாணயங்கள் அச்சிடப்பட்டன. இதற்கு முன்பு, வெகு தூரத்தில் இருந்த ஆர்க்காட்டுக்கு வெள்ளியை அனுப்பி அச்சிட்டு வந்த பிரெஞ்சுகாரர்களுக்கு, ஆலம்பரவை ரூட் மூலம் போக்குவரத்துச் செலவு மிச்சமானது. ஆலம்பரவையிலும் இந்த வெள்ளி சட்டப்பூர்வ நாணயமாக மாறியதால், முகலாய ஆளுநருக்கு ஒரே வருமான மழை தான்.

இதுமட்டுமா... பிரெஞ்சு கப்பல்கள் வழக்கமாக கோடை காலத்திலோ அல்லது மழைக்காலத்திலோ புதுச்சேரி கரை ஒதுங்கும். அப்படி வரும் வெள்ளியை அச்சடிப்பதற்காகச் சென்னைக்கும் பெருமளவில் அனுப்பி வைப்பார்கள். அங்கே 3.5 ரூபாய்க்குச் சமமான பகோடா நாணயங்கள் தயாரிக்கப்பட்டன.

ஆங்கிலேயர்களின் நாணயங்களுக்கு நிகராக, பொறாமைப்படும் அளவுக்குத் துாய்மையிலும் நேர்மையிலும் இந்த நாணயங்கள் மிளிர்ந்ததால், மெட்ராஸ் வியாபாரிகளே பிரெஞ்சுகாரர்களிடம் வெள்ளிக்காகப் புதுச்சேரிக்குக் படைபெடுத்து வரத் தொடங்கினார்கள்.

ஆனால், வரலாற்றுப் பாதையில் எப்போதும் ஏற்ற இறக்கங்கள் உண்டுதானே? 1726 முதல் 1739 வரையிலான காலகட்டத்தில் பிரான்ஸிலிருந்து வந்த கப்பல்களில் போதிய சரக்குகள் வரவில்லை. அதிலும் குறிப்பாக, 1730 முதல் 1735 வரை பிரான்ஸிலிருந்து புதுச்சேரிக்கு வெள்ளியே வரவில்லை.

கப்பல் போக்குவரத்து சுத்தமாக நின்றுபோனதால் அந்தப் ஐந்தாண்டுகள் வணிகத்தில் பெரும் தொய்வு ஏற்பட்டது. என்னதான் இடையூறுகள் வந்தாலும், பிரான்ஸிலிருந்து இறக்குமதியான அந்த வெள்ளியும், அதை நாணயமாக மாற்றிச் சுழற்சியில் விட்ட பிரெஞ்சு-முகலாய நுட்பமும் தான் அன்றைய புதுச்சேரியின் ஜவுளி வணிகத்திற்கு மிகப் பெரிய வித்தாக அமைந்தது என்பது மறுக்க முடியாத வரலாறு...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us