ADDED : டிச 16, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : திருவக்கரை கிராமத்தில் புகழ் வாய்ந்த சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், உள்ள வக்ரகாளியம்மனுக்கு பவுர்ணமி, அமாவாசை தினங்களில் ஜோதி தரிசனம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் வக்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு 12.00 மணி அளவில் வக்ர காளியம்மன் கோபுரத்தில் ஜோதி தரிசனம் நடந்தது.