ADDED : நவ 16, 2024 02:14 AM

அ நிறம் | அளவு
வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை சுற்றி பிரசித்திபெற்ற ஆறு சிவாலயங்கள், 18 சித்தர்கள் ஜீவ சமாதியுடன் ஆன்மிக பூமியாக திகழ்கிறது. திருவண்ணாமலை கிரிவலம் போன்று, பவுர்ணமி நாளில் திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆன்மிக நடைபயணம் செல்கின்றனர்.
அதன்படி நேற்று 34வது மாத பவுர்ணமி ஆன்மிக நடைபயணத்தை முன்னிட்டு மாலை 6:00 மணியளவில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் துவங்கிய ஆன்மிக நடையணம் மாட வீதிகள் வழியாக மூலக்கடை, சுல்தான்பேட்டை, வி.மணவெளி, ஒதியம்பட்டு, திருக்காஞ்சி, உறுவையாறு, ஆச்சார்யாபுரம், கோட்டைமேடு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.
புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதியை சேர்ந்த சிவனடியார்கள், சிவாச்சார்யர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
