தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பவுர்ணமி ஆன்மிக நடைபயணம்

பவுர்ணமி ஆன்மிக நடைபயணம்

பவுர்ணமி ஆன்மிக நடைபயணம்


ADDED : ஜூலை 11, 2025 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2025 04:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்டு நேற்று மாலை 42வது ஆன்மிக நடைபயணம் சென்றனர்.

வில்லியனுாரில் பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதனை சுற்றிலும் பிரசித்திபெற்ற ஆறு சிவாலயங்கள், 18 சித்தர்கள் ஜீவ சமாதி அமைந்துள்ளன.

பவுர்ணமியையொட்டி, திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்து நேற்று மாலை 6:00 மணிக்கு ஆன்மிக நடைபயணம் புறப்பட்டனர். நடைபயணம், நான்கு மாட வீதிகளில் உள்ள அம்மன், விநாயகர், தென்கலை வரதராஜபெருமாள் கோவில்களில் வழிபட்டு, மூலக்கடை வினாயகர் கோவில், ராமபரதேசி சித்தர் பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய்சுவாமி சீத்தர் பீடம், வி.மணவெளி, ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு வழியாக காசிவிஸ்வநாதர் கோவிலில் தரிசனம் முடித்தனர்.

சங்கராபரணி ஆறு மேம்பாலம் வழியாக திருக்காஞ்சி கெங்கைகாவராக நதீஸ்வரர் கோவில், உறுவையாறு, கோட்டைமேடு வழியாக மீண்டும் திருக்காமீஸ்வரர் கோவிலை வந்தடைந்தனர்.

திரளான பக்தர்கள், சிவனடியார்கள் மற்றும் சிவாச்சார்யர்கள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us