ADDED : பிப் 28, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : நல்லவாடு மனோன்மணி அம்மன் கோவில் கும்பாபிேஷக திருப்பணிக்கு ரூ. 1.75 லட்சம் நிதி, வழங்கப்பட்டது.
தவளக்குப்பம் அருகே நல்லவாடு பகுதியில் மனோன்மணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிேஷக, திருப்பணி வேலை துவக்கப்பட்டது. அதற்காக இந்து சமய அறநிலைத் துறை மூலம் ரூ. 1.75 லட்சம் நிதிக்கான காசோலையை, சபாநாயகர் செல்வம் நேற்று திருப்பணிக்குழு நிர்வாகிகளிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

