/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடும்ப தலைவரை இழந்தோருக்கு நிதி
/
குடும்ப தலைவரை இழந்தோருக்கு நிதி
ADDED : ஆக 09, 2025 07:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மணவெளி தொகுதியில் குடும்ப தலைவரை இழந்த எட்டு குடும்பங்களுக்கு நிதியுதவி பெறுவதற்கான அரசாணையை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் மணவெளி தொகுதியில் குடும்ப தலைவரை இழந்த எட்டு குடும்பங்களுக்கு நிதியுதவிக்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜிவ்காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தரப்படும் நிதியுதவிக்கான அரசாணையை, சபாநாயகர் செல்வம் பயனாளிகளுக்கு வழங்கினார்.
தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், பொது செயலாளர் சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

