/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கேலோ இந்தியா போட்டி போஸ்டர்: முதல்வர் வெளியீடு
/
கேலோ இந்தியா போட்டி போஸ்டர்: முதல்வர் வெளியீடு
ADDED : பிப் 19, 2024 05:09 AM

புதுச்சேரி: கேலோ இந்தியா தேக்வோண்டோ விளையாட்டுப் போட்டிக்கான போஸ்டரை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.
மத்திய அரசு விளையாட்டு ஆணையம் மேற்பார்வையில் நடத்தப்படும், கேலோ இந்தியா மகளிர் போட்டிகள், தேக்வோண்டோ பெடரேஷன் ஆப் இந்தியா மூலம், புதுச்சேரி தேக்வோண்டோ விளையாட்டு சங்கம் சார்பில் உப்பளம் ராஜிவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் வரும் 27 ம் தேதி துவங்கி வரும் 1ம் தேதி வரை நடக்கிறது.
போட்டிக்கான அடையாள போஸ்டரை சபாநாயகர் செல்வம், ஒலிம்பிக் சங்க தலைவரும், அமைச்சருமான தேனீ ஜெயக்குமார் முன்னிலையில், முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். இதனை தேக்வோண்டோ சங்க நிறுவனத் தலைவர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், ஒலிம்பிக் சங்க செயலாளர் தனசேகர், சி.இ.ஓ., முத்துகேசவலு உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து சங்க செயலாளர் மஞ்சுநாதன் கூறியதாவது, கேலோ இந்தியா மகளிர் தேக்வோண்டோ போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள விராங்கனைகள் இன்று 19ம் தேதி முதல் விண்ணப்பங்களை பெற்று வரும் 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வீரர்கள் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் பகுதி களை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
இப்போட்டியில் வழங்கப்படும் சான்றிதழ் மத்திய மற்றும் புதுச்சேரி அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 7708353594 தொடர்பு கொள்ளவும்.

