/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கணபதி பாலிமர் உரிமையாளர் இல்ல திருமண விழா
/
கணபதி பாலிமர் உரிமையாளர் இல்ல திருமண விழா
ADDED : ஜன 29, 2026 05:46 AM

புதுச்சேரி: அரியாங்குப்பம் கணபதி பாலிமர் உரிமையாளர் சங்கர்-தமிழ்செல்வி இல்ல திருமண விழா மரப்பாலம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது.
விழாவில் மணமக்கள் தினேஷ் - ஹரினி ஆகியோரை உள்துறை அமைச்சர் நமசிவாயம், எதிர்க்கட்சி தலைவர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.,க்கள்., சம்பத், சிவசங்கர், வணிகர் சங்க தலைவர் பாபு, மற்றும் நிர்வாகிகள், பிளாஸ்டிக் சங்க நண்பர்கள், சமுதாய தலைவர்கள், ஊர் பெரியவர்கள், புதுச்சேரி குலோவிங் ஸ்டார் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக திருமண விழாவிற்கு வருகை தந்தவர்களை பிளாஸ்டிக் சங்க நிர்வாகிகள் சுதாகரன், அருள்செல்வன், சேது மன்னன், தன்சுக்சேத்தியா, அசோகன், சித்தானந்தம், சம்பத், ஹரிபிரசாத், ஸ்ரீதர் ஆகியோர் வரவேற்றனர்.

