ADDED : செப் 15, 2026 08:31 PM
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் நேற்று இரண்டாம் நாள் சிறப்பு பூஜை நடந்தது.
புதுச்சேரி விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில், 42ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கோலாகலாமாக துவங்கியது. சாரம் அவ்வை திடலில் நடக்கும் விழாவில், 21 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.
நேற்று மாலை 6.00; மணிக்கு மகா கணபதி பூஜை, சிறப்பு பஜன் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு வரவேற்றார். செமின் சிஅண்ட் ஐ., நிறுவனர் பெருமாள் ரங்கராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன் வாழ்த்தி பேசினார். பா.ஜ., மாநில துணைத் தலைவர் ரத்தினவேல், விழா பேரவை சுப்ரமணியம், இந்து வழக்கறிஞர் முன்னணி கோட்ட தலைவர் பழனிராஜா, பாலாஜி மொபைல்ஸ் முனுசாமி, வசந்தா, ஷண்முகம், முன்னாள் கவுன்சிலர் சத்யராஜ், வைத்தியநாதன், விஸ்வகர்மா அறக்கட்டளை தலைவர் பாபு, தேசிய இந்து பவுன்டேஷன் சுரேஷ், செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., சிவசங்கர், முருகன், தேவஒளி, சிவசண்முகசுந்தரம், பா.ஜ., நாகேஸ்வரன், இந்து வழக்கறிஞர் முன்னணி தலைவர் கணேஷ் ஞானசம்பந்தம், பூங்கோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், வாசவி அன்னமாச்சார்யார் பஜனை குழுவினரின் பஜன் பக்தி பாடல் நிகழ்ச்சி, எஸ்.கே.டி., குழுவினரின் சாக்கிய நாயனார் வரலாற்று நாடகம் நடந்தது.
