தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விநாயகர் சதுர்த்தி விழா பக்தி பாடல் நிகழ்ச்சி

விநாயகர் சதுர்த்தி விழா பக்தி பாடல் நிகழ்ச்சி

விநாயகர் சதுர்த்தி விழா பக்தி பாடல் நிகழ்ச்சி


ADDED : செப் 17, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 09:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாரம் விநாயகர் சதுர்த்தி விழாவில், நக் ஷத்ரா குழுவினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில், 42ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 14ம் தேதி துவங்கியது. சாரம் அவ்வை திடலில் நடக்கும் விழாவில், 21 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

4ம் நாளான நேற்று மாலை 6:00 மணிக்கு மகா கணபதி சிறப்பு பூஜை நடந்தது. தண்டபானி வரவேற்றார். சுரேஷ் தலைமை தாங்கினார். செல்வராஜ் வாழ்த்தி பேசினார். மவுலிதேவன், ஏ.பி.வி.பி., வடதமிழக துணைத் தலைவர் இளங்கோவன், அரசு வழக்கறிஞர் தேவேந்திரன், ஆறுமுகம், இந்து வழக்கறிஞர் முன்னணி கிருஷ்ணராஜ், பி.எம்.எஸ்., மாநிலத் தலைவர் ஆசைதம்பி, சரவணக்குமார், குணசேகரன், கணபதி, பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏ., செல்வம், வழக்கறிஞர் சங்க தலைவர் ரமேஷ், ஆனந்து, செல்வகணபதி, சாமிநாதன், மதன், பாக்யராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். பஜன் பக்தி பாடல் நிகழ்ச்சி நடந்தது. கலைமாமணி வீரமணிராஜூ மகன் அபிேஷக்ராஜூ நக் ஷத்ரா குழுவினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us