/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆல்பா மெட்ரிக் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா
/
ஆல்பா மெட்ரிக் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா
ADDED : ஆக 27, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்கள் விநாயகர் படத்தை பல்வேறு வண்ணங்களில் தீட்டி மகிழ்ந்தனர். மாணவர்கள் விநாயகர் வேடமணிந்து வந்தனர். நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களிமண் கொண்டு விநாயகர் சிலை செய்து, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். சிறப்பு படைப்புகளை கொடுத்தமாணவர்களை ஆல்பா பள்ளி குழுமங்களின் இயக்குநர் தனதியாகு பாராட்டினார்.

