/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில், 6 பேரிடம் ரூ. 4.85 லட்சம் மோசடி செய்த கும்பலுக்கு வலை
/
புதுச்சேரியில், 6 பேரிடம் ரூ. 4.85 லட்சம் மோசடி செய்த கும்பலுக்கு வலை
புதுச்சேரியில், 6 பேரிடம் ரூ. 4.85 லட்சம் மோசடி செய்த கும்பலுக்கு வலை
புதுச்சேரியில், 6 பேரிடம் ரூ. 4.85 லட்சம் மோசடி செய்த கும்பலுக்கு வலை
ADDED : டிச 13, 2024 05:52 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 6 பேரிடம் 4.85 லட்சம் ரூபாய் மோசடி செய்த, மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி குருமாம்பேட் பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர், இவரை தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக, அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார்.
அதை நம்பி, அவர், 2.21 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். அந்த நபர், கொடுத்த பணியை முடித்த பின்னர், சம்பாதித்த பணத்தை அவரால் எடுக்க முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.
வீராம்பட்டினத்தை சேர்ந்த முருகசாமியை தொடர் கொண்ட மர்ம நபர், பங்கு சந்தையில், முதலீடு செய்வது குறித்து பேசினார்.
அதையடுத்து, அவர், 1 லட்சம் ரூபாயை, தனது வங்கி கணக்கு மூலம் அனுப்பினார். பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல், மோசடி கும்பலிடம் ஏமாந்தார்.
மேலும், மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன், 39 ஆயிரம் ரூபாய் முதலியார்பேட்டையை சேர்ந்த ராஜலட்சுமி, 81 ஆயிரம ரூபாய், காரைக்காலை அடுத்த திருநள்ளாறை சேர்ந்த ராஜேஷ் 13 ஆயிரம் ரூபாய் , அரியாங்குப்பத்தை சேர்ந்த சாண்டில்யன் 31 ஆயிரம் ரூபாய் அனுப்பி மோசடி கும்பல்களிடம் ஏமாந்துள்ளனர்.
இதுகுறித்து, 6 பேர் கொடுத்த புகாரின் பேரில், சைபர்கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி செய்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.