/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
6 பேரிடம் ரூ.8.07 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
/
6 பேரிடம் ரூ.8.07 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
6 பேரிடம் ரூ.8.07 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
6 பேரிடம் ரூ.8.07 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
ADDED : டிச 21, 2024 05:54 AM
புதுச்சேரி : புதுச்சேரியில், 6 பேரிடம் 8.07 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் மூலம், பகுதி நேரம் வேலை செய்ததால், அதிக சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பி, 5.53 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
சேலிமேடு பகுதியை சேர்ந்த கீதாஞ்சலி 1.20 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
உருளையன்பேட்டை கனிமொழி என்பவரை தொடர் கொண்டவர் போலீஸ் அதிகாரி என, தன்னை அறிமுகம் செய்து கொண்டார். வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என, மிரட்டினார். அதற்கு பயந்த, அவர் 95 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.
மதகடிப்பட்டு செல்வன், 15 ஆயிரம், ஒயிட் டவுன் பகுதி சாகுல் ஹமீது, 14 ஆயிரம், வில்லியனுார் பாலநாராயணன், 10 ஆயிரம் ஏமாந்தனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி செய்த கும்பலை தேடி வருகின்றனர்.