/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜர் நகரில் காங்., பாதயாத்திரை
/
காமராஜர் நகரில் காங்., பாதயாத்திரை
ADDED : ஜன 23, 2026 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதியில் காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில் பாதயாத்திரை நடந்தது.
புதுச்சேரி மாநில காங்., சார்பில், புதுச்சேரி பகுதிக்குட்பட்ட 23 சட்டசபை தொகுதிகள் முழுதும் பாதயாத்திரை நடக்கிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட ஜிஞ்சர் ஓட்டல் முன் பாதயாத்திரை துவங்கி பழைய கலெக்டர் அலுவலகம் ஞானபிரகாசம் நகரில் முடிந்தது.
பாதயாத்திரையில் காங்., சீனியர் துணை தலைவர் தேவதாஸ், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

