/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்; தலைமறைவான ஒடிசா வாலிபர் கைது
/
சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்; தலைமறைவான ஒடிசா வாலிபர் கைது
சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்; தலைமறைவான ஒடிசா வாலிபர் கைது
சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்; தலைமறைவான ஒடிசா வாலிபர் கைது
ADDED : நவ 07, 2024 06:14 AM

புதுச்சேரி; மும்பை சிறுமி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் தப்பிச் சென்ற ஒடிசா வாலிபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மும்பையைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது தாய், தந்தையுடன், கடந்த வாரம் புதுச்சேரி வந்தார். கடந்த 30ம் தேதி சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார்.
பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் 31ம் தேதி இரவு பெரியக்கடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 1ம் தேதி மாலை கடற்கரையில் மீட்கப்பட்ட சிறுமி, மிகவும் சோர்வாக காணப்பட்டதால் மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில், சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.
போலீஸ் விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் காஜாமொய்தீன், 34; சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும், அதன்பிறகு புதுச்சேரிக்கு அழைத்து வந்து விட்டு சென்றது தெரியவந்தது.
நகர வீதியில் நடந்து சென்ற சிறுமியை, தீபாவளி பண்டிகையை கொண்டாட புதுச்சேரி வந்த வெளிமாநில தொழிலாளர்கள் 4 பேர் தங்களின் காரில் சென்னைக்கு அழைத்துச் சென்று, தாங்கள் தங்கியிருந்த அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், சிறுமியை காரில், புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது.
பெரியக்கடை போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் காஜாமொய்தீன், சென்னை கட்டுமான நிறுவனத்தில், இன்டீரியர் டிசைன் வேலை செய்து வந்த ஒடிசாவை சேர்ந்த தினபந்து, 32; தெலுங்கானா மாநிலம் ரமேஷ், 30; உத்தரபிரதேசத்தை சேர்ந்த பங்கஜ், 35; ஆகியோரை கைது செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய ஒடிசாவைச் சேர்ந்த சித்ரஞ்சன், 30; என்பவர் தலைமறைவானார். பெங்களூருவில் பதுங்கியிருந்த சித்ரஞ்சனை நேற்று முன்தினம் பெரியக்கடை போலீசார் கைது செய்தனர்.
அவரை நேற்று புதுச்சேரிக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.