
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வாய்க்கால்களில் மழைநீர் தேங்காமல் இருக்க பொதுப்பணித்துறை ஊழியர்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், புதுச்சேரியில் நேற்று காலையில் மழை பெய்தது. வாய்கால்களில் மழைநீர் தேங்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை யாக, குப்பைகளை அகற்றும் பணியில், பொதுபணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். விழுப்புரம் சாலை, விவேகானந்தர் நகர் சந்திப்பில் வாய்க்காலில் உள்ள குப்பைகளை அகற்றினர்.

