UPDATED : நவ 02, 2026 06:46 PM
ADDED : நவ 02, 2026 06:41 PM

புதுச்சேரி: ஏர்போர்ட் சாலையில் குப்பை தொட்டியில் இருந்து சிதறி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
லாஸ்பேட்டையில், ஏர்போர்ட், சாலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கலைக்கல்லுாரி, அரசு அலுவலகங்கள் உள்ளன. ஏர்போர்ட் சாலை காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் அருகே குப்பைத் தொட்டியில் குப்பைகளை எடுக்காமல் உள்ளது.
இதனால், குப்பை நிரம்பி சாலையில் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. சாலையில் கிடக்கும் இலைகள், குப்பைகளை மாடுகள், நாய்கள் கிளறி விட்டு செல்வதால் அந்த பகுதி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாடுகள் குப்பைகளை சாப்பிடுவதற்கு சாலையில் நிற்கும் போது போக்குவரத்து இடயைூறு ஏற்படுகிறது.
தினந்தோறும் அவ்வழியாக செல்லும், பொதுமக்கள், மாணவர்கள் சுகம் சுளித்து கொண்டு செல்கின்றனர். சாலையில் சிதறி கிடக்கும் குப்பைகளை, சுத்தம் செய்யும் ஊழியர்கள் மூலம் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
