தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கடற்கரையில் மாயமான ட்ரோன் கேமரா, மொபைல் மீட்பு

கடற்கரையில் மாயமான ட்ரோன் கேமரா, மொபைல் மீட்பு

கடற்கரையில் மாயமான ட்ரோன் கேமரா, மொபைல் மீட்பு


UPDATED : நவ 02, 2026 06:46 PM

ADDED : நவ 02, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 06:46 PM ADDED : நவ 02, 2026 06:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கடற்கரை சாலையில் காணாமல் போன ரூ.70 ஆயிரம் மதிப்பிலான ட்ரோன் கேமராவை கடலோர காவல் படையினர் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த விக்கி, சூர்யா ஆகியோர் கடற்கரை சாலை தலைமைச் செயலகம் எதிரே தங்கள் கொண்டு வந்த ரூ.70 ஆயிரம் மதிப்பிலான ட்ரோன் கேமரா திடீரென காணாமல் போனது.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படை தலைமைக்காவலர் திவ்யா மற்றும் லைப் கார்டுகளான சாந்தகுமார், ராமன், அய்யனாரப்பன் ஆகியோர் கடற்கரை பகுதி முழுதும் தீவிரமாகத் தேடியதுடன், அங்கிருந்த பொதுமக்களிடம் ட்ரோன் கேமரா குறித்து விசாரித்தனர். இதையடுத்து, 2 மணி நேர தேடுதலுக்கு பின் ட்ரோன் கேமராவை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

காணாமல் போன ட்ரோன் கேமராவை விரைந்து கண்டுபிடித்து, ஒப்படைந்த கடலோர காவல் படையினர் மற்றும் லைப் கார்டுகளை கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் சுற்றுலா பயணிகள் பாராட்டினர்.

இதேபோல், திருச்சியில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த சிவேஸ்வர், கடற்கரை பகுதியில் தவறவிட்ட ரூ.70 ஆயிரம் மதிப்பிலான மொபைல் மற்றும் ரயில் டிக்கெட்டை கடலோர காவல் படை உதவி சப் இன்ஸ்பெக்டர் அழகேசன், போலீசார் பக்கிரி சாமி மற்றும் லைப் கார்டுகள் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us