தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கிருமாம்பாக்கம் அருகே நீரோடை ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்: ஆதரவு மற்றும் எதிர்ப்பால் பரபரப்பு

கிருமாம்பாக்கம் அருகே நீரோடை ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்: ஆதரவு மற்றும் எதிர்ப்பால் பரபரப்பு

கிருமாம்பாக்கம் அருகே நீரோடை ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்: ஆதரவு மற்றும் எதிர்ப்பால் பரபரப்பு


UPDATED : நவ 02, 2026 06:47 PM

ADDED : நவ 02, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 06:47 PM ADDED : நவ 02, 2026 06:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே நீரோடையில் இருந்த ஆக்கிரமிப்பு, போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருமாம்பாக்கம் அடுத்துள்ள ஆலடிமேடு, வம்பாபேட் கிராமங்களுக்கு இடையே மேற்கு பகுதியில் நல்ல தண்ணி ஆறு என கூறப்படும் ஓடை ஒன்று செல்கிறது. பாகூர் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் மற்றும் மழை வெள்ள நீர் இந்த ஓடை வழியாக சென்று, பனித்திட்டு முத்துவாரம் வழியாக கடலில் கலக்கும். இந்த ஓடையில் உள்ள நல்ல தண்ணீரை பயன்படுத்தி, அப்பகுதி விவசாயிகள், பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2024ம் ஆண்டு, தனியார் நபர் ஒருவர், அந்த ஓடையை ஆக்கிரமித்து, மீன் குட்டை அமைத்தும், ஓடையின் குறுக்காக சிமென்ட் குழாய், கருங்கற்களை காரைகளை பயன்படுத்தி பாதை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தற்போது, மழை காலம் என்பதால், நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிட வேண்டும் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, பொதுப்பணித்துறை மூலமாக அந்த ஓடையில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று காலை நடந்தது.

இதற்கு, ஆக்கிரமிப்பு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கு திரண்ட பொது மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிட ஆதரவு தெரிவித்தனர். புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் இடத்தை அளந்து ஆக்கிரமிப்பை அகற்றலாம் என்றனர்.

பாகூர் தாசில்தார் ராஜலட்சுமி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல், ரெட்டிச்சாவடி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகளும் அங்கு வந்தனர். அப்போது, தாசில்தார் ராஜலட்சுமி, நீர் வழித்திடத்தில் ஆக்கிரமிப்பு என்பதை ஏற்க முடியாது. அது அகற்றபட வேண்டும் என்றார். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன், புதுச்சேரி எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றிவருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us