/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய புறவழிச் சாலையில் குப்பை அகற்றும் பணி துவக்கம்
/
புதிய புறவழிச் சாலையில் குப்பை அகற்றும் பணி துவக்கம்
புதிய புறவழிச் சாலையில் குப்பை அகற்றும் பணி துவக்கம்
புதிய புறவழிச் சாலையில் குப்பை அகற்றும் பணி துவக்கம்
ADDED : நவ 02, 2025 04:24 AM

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் புதிய புறவழிச் சாலையில் கொட்டப்பட்ட குப்பைகள் கிரீன் வாரியர்ஸ் மூலம் அகற்றும் பணி நேற்று துவங்கியது.
அரும்பார்த்தபுரம் - நுாறடி சாலையை இணைக்கும் புறவழிச் சாலையின் இருபுறமும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இப்பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என, எச்சரிக்கை பலகை அமைக்கப்படவில்லை.
இதற்கிடையே, புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி பராமரிப்பில் உள்ள புறவழி சாலையை அதிகாரிகள் சுழற்சி முறையில், கண்காணிக்க தவறியதால், சாலையோரங்களில் குப்பைகள் மற்றும் கட்டட கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டன.
இதனால், நுாறடி சாலையில் இருந்து அரும்பார்த்தபுரம் வரை உள்ள புறவழிச் சாலை ஓரங்கள் முழுதும் மலைபோல் குப்பைகள் குவிந்து இருந்தன.
நகராட்சி ஆணையர் உத்தரவின்படி, உழந்தை ஏரி அருகே சாலையோரங்களில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றும் பணி நேற்று துவங்கியது.
அந்த குப்பைகளை கிரீன் வாரியர்ஸ் ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதுவும் தெற்கு பகுதி சாலையோரம் மட்டுமே குப்பைகள் அகற்றப்படுகிறது.
புறவழிச் சாலையின், வடக்கு பகுதியான உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட சாலையில், குப்பைகள் அகற்றப்படவில்லை.
இதுகுறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கூறுகையில், 'புறவழிச் சாலையின் இரு புறங்களிலும் குப்பை அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது. விரைவில் முழுமையாக குப்பைகள் அகற்றப்படும்.
இனி அத்துமீறி புறவழி சாலையோரம் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

