/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி விழா
/
முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி விழா
ADDED : நவ 02, 2025 04:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி தேவர் பேரவை சார்பில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் 63ம் ஆண்டு குரு பூஜை விழா நடந்தது.
விநாயகா முருகன் அரிசி ஆலை வளாகத்தில் அமைந்துள்ள பேரவை அலுவலகத்தில் நடந்த விழாவில், பேரவைத் தலைவர் தனபாலன் விளக்கேற்றினார்.
இதில், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், முத்துராமலிங்கம் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மகளிரணித் தலைவி தாமரைச்செல்வி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்.
ஏற்பாடுகளை, தேவர் பேரவை நிர்வாகிகள் லட்சுமணத் தேவர், ரத்தினசாமி முருகேசன், சந்திரன், செங்குட்டுவன், ராஜசேகர், முருகன் செய்திருந்தனர்.

