/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருப்பதி பாத யாத்திரைக்கு மாலை அணியும் நிகழ்ச்சி
/
திருப்பதி பாத யாத்திரைக்கு மாலை அணியும் நிகழ்ச்சி
ADDED : செப் 18, 2025 11:20 PM

புதுச்சேரி: வெங்கடேச பெருமாள் பக்தஜன சபா சார்பில் பக்தர்கள் வரும் அக்டோபர் 5ம் தேதி திருப்பதி திருமலை பாதயாத்திரை செல்கின்றனர்.
புதுச்சேரி, வெங்கடேச பெருமாள் பக்தஜன சபா சார்பில், 33ம் ஆண்டு திருப்பதி திருமலை பாதயாத்திரை வரும் அக்டோபர் 5ம் தேதி காலை 5:00 மணிக்கு திருச்சிற்றம்பலத்தில் இருந்து புறப்படுகிறது. இதையொட்டி, புரட்டாசி மாதம் 1ம் தேதியை முன்னிட்டு, பாரதி பூங்காவில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம், மாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது.
சபா தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி, பக்தர்களுக்கு மாலை அணிவித்து விரதத்தை துவக்கி வைத்தார். பூபதி, ஜெகநாதன், மதுரகவி ராமானுஜதாசன், கணபதி, சிவராமன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து கொண்டனர்.