/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு
/
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு
ADDED : ஜன 22, 2024 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு நேற்று நடந்தது.
ஆய்வறிஞர் தமிழ்மணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறினார்.
புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து, செயலர் சீனு மோகன் தாசு, துணைத் தலைவர் திருநாவுக்கரசு, பொறியாளர் பாலசுப்ரமணியன், ஆட்சிக்குழு உறுப்பினர் உசேன், சிவேந்திரன், கவிஞர் ஆனந்தராசன், சேகர், தமிழ் விரிவுரையாளர் கலைவாணி பாண்டியன் மற்றும் திருவள்ளுவர் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.