ADDED : ஆக 20, 2026 03:50 PM
புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, திருக்குறள் கூறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் சீனு மோகன்தாசு வரவேற்றார். முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன் பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, திருக்குறள் கூறும் நிகழ்வினை துவக்கி வைத்தார்.
இதில், நியூ லேண்ட் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சங்கப் பொருளாளர் அருள் செல்வம், துணைத்தலைவர் திருநாவுக்கரசு, சுயநிதி பள்ளி கூட்டமைப்பின் தலைவர் ரங்கநாதன், பொறியாளர் பாலசுப்பிரமணியன், முனைவர் பாரதி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், ராஜா, சிவேந்திரன், ஆனந்தராசன், இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
