பசுக்களுடன் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஊர்வலம்
பசுக்களுடன் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஊர்வலம்
ADDED : ஆக 20, 2026 04:23 PM
புதுச்சேரி: பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நடத்திய ஊர்வலத்தில் பாலை கீழே ஊற்றி அரசுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
புதுச்சேரி மாநில பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்ட ;ஊர்வலம் நேற்று நடந்தது. அண்ணா சிலை அருகில், துவங்கிய ஊர்வத்திற்க , சங்க செயலாளர் அன்புமணி, கவுரவ தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினர். சங்க தலைவர் கலைச்செல்வன், கரிக்கலாம்பாக்கம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் பலராமன் முன்னிலை வகித்தனர். தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பெருமாள் கண்டன உரையாற்றினார்.
ஊர்வலத்தில் பால் உற்பத்தியாளர்கள் தலையில் புல்கட்டு, பால கேனுடன், பதாகைகளை ஏந்தியும் கோஷமிட்டபடி சென்றனர். சட்டசபை அருகே முடிந்த ஊர்வலத்தில் கேனில் இருந்த பாலை கீழே ஊற்றி கோஷமிட்டனர்.
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.60 உயர்த்தவேண்டும். ஆண்டுதோறும் பால் விலையை உயர்த்த வேண்டும். லிட்டருக்கு ரூ.5 ஊக்க தொகை வழங்க வேண்டும்.
சங்க உறுப்பினர்களுக்கு பசும்புல், தீவனத்தை மானிய விலையில் வழங்க வேண்டும். வெளிமாநில பால் கொள்முதலை நிறுத்தி, உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். பிரதம சங்கங்களுக்கு வழங்க வேண்டிய 25 ஆண்டு கால ஈவுதொகையை வழங்க வேண்டும். முடக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பன வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் 10ம் தேதி முதல் பாண்லேவிற்கு பால் சப்ளை முற்றிலுமாக நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.
