/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேங்கடாசலபதி கோவிலில் கருடசேவை வீதியுலா
/
வேங்கடாசலபதி கோவிலில் கருடசேவை வீதியுலா
ADDED : அக் 06, 2025 01:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கொம்பாக்கம், செங்கழுநீரம்மன் கோவில் வளாகத்தில் வேங்கடாசலபதி சன்னதி அமைந்துள்ளது. இங்கு, புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக் கிழமையை முன்னிட்டு, 7ம் ஆண்டு கருடசேவை விழா நடந்தது.
இதையடுத்து, காலை வேங்கடாசலபதி சுவாமி சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் கருட சேவையில் சுவாமி வீதியுலா நடந்தது.
இதில், எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி உமாபதி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.