/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதகு ஷட்டர் புதுப்பிக்கும் பணி துவக்கம்
/
மதகு ஷட்டர் புதுப்பிக்கும் பணி துவக்கம்
ADDED : அக் 12, 2025 04:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார் : பத்துக்கண்ணு மதகு ஷட்டர் சரிசெய்யும் பணியை சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
புதுச்சேரி பொதுப்பணித் துறை நீர்பாசன கோட்டம் சார்பில், ரூ.15 லட்சம் திட்ட மதிப்பில் ஊசுடேரி பாசன வாய்க்காலான துலுக்கன் வாஞ்சி மதகு மற்றும் சங்கராபரணி ஆற்றுக்கு செல்லும் போக்கு வாய்க்கால் மதகுகளில் புதிய ஷட்டர் அமைக்கும் பணியை சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., பூஜை செய்து துவக்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்ட உதவி பொறியாளர் லுாய்பிரகாசம், இளநிலைப் பொறியாளர் சிரஞ்சீவி உட்பட பலர் உடனிருந்தனர்.