/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மர் இயக்குநராக கவுதம் ராய் நியமனம்
/
ஜிப்மர் இயக்குநராக கவுதம் ராய் நியமனம்
ADDED : ஜன 02, 2025 06:44 AM

புதுச்சேரி: ஜிப்மர் இயக்குநராக சீனியர் டாக்டர் கவுதம் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜிப்மர் இயக்குனராக ராகேஷ் அகர்வால் கடந்த 2019 ஜன., 1ம் தேதி நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்காலம் கடந்த 2023ல் முடிந்த சூழ்நிலையில் மீண்டும் ஓராண்டு அல்லது புதிய இயக்குநர் நியமிக்கும் வரை தொடருவார் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது. தொடர்ந்து ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பணிகளை கவனித்து வந்தார்.
இதற்கிடையில் அவருடைய ஓராண்டு கால பதவி நீட்டிப்பு கடந்த 31ம் தேதியுடன் முடிந்தது. ஜிப்மர் இயக்குநர் பொறுப்பில் இருந்து ராகேஷ் அகர்வால் விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு பதில் ஜிப்மர் இயக்குநராக சீனியர் டாக்டர் கவுதன் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜிப்மர் இயக்குநராக பணியாற்றிய டாக்டர் ராகேஷ் அகர்வால் பதவிக்காலம் கடந்த 31ம் தேதியுடன் முடிவடைந்தது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் உத்தரவுக்கு இணங்க, நிரந்தர இயக்குநர் நியமிக்கப்படும் வரை, ஜிப்மரின் மூத்த பேராசிரியர் டாக்டர் கவுதம் ராய் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என, குறிப்பிடப்பட்டுள்ளது.

