ADDED : மார் 31, 2025 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்; புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் இயங்கி வரும் வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார அளவிலான பாலின விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
வில்லியனுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அதிகாரி தயானந்த் டெண்டுல்கர் வரவேற்றார். அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், சாய்சரவணன்குமார் ஆகியோர் மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மகளிர் சட்ட ஆலோசனை மைய முதுநிலை வழக்கறிஞர் ரீனாஐஸ்வர்யா, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை பாலின நிபுணர் சாந்தலட்சுமி ஆகியோர் பாலின விழிப்புணர்வு குறித்து பேசினார். இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி நன்றி கூறினார்.