ADDED : மார் 18, 2024 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பாலின சமத்துவம் குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் 113வது உலக மகளிர் தின விழா, முல்லை நகர் அரசு ஊழியர்கள் சம்மேளனத்தில் நடந்தது. சமம் இயக்க தலைவர் அன்பரசி தலைமை தாங்கினார்.
பாலின சமத்துவம் குறித்து எழுத்தாளர் தீபலட்சுமி, தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் தலைவர் மோகனா சிறப்புரையாற்றினர்.  மதிவாணன், அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க புதுச்சேரி தலைவர் முனியம்மாள், சமம் இயக்க பொதுச்செயலாளர் இளவரசி, பொருளாளர் இந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

