
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : இந்திய பொறியாளர்கள் கழகம் புதுச்சேரி மையம் சார்பில் 14வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், செண்பகா ஓட்டலில் நடந்தது.
புதுச்சேரி தலைவர் சீனு திருஞானம் வரவேற்றார். செயலர் கணேசன் மார்ச் 31ம் தேதி வரையிலான நிதி ஆண்டின் தணிக்கை அறிக்கை பொதுக்குழுவில் சமர்ப்பித்து ஒப்புதல் பெறப்பட்டது.
புதிய தணிக்கையாளர் நியமிப்பதிற்கும் ஒப்புதல் பெறப்பட்டது. பொதுகுழு உறுப்பினர்களின் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்திய பொறியாளர் கழக நிர்வாகிகள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

