நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஏ.ஐ.டி.யூ.சி. விற்பனைக்குழு ஊழியர்கள் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
பாக்கமுடையான்பட்டு காரல் மார்க்ஸ் படிப்பகத்தில் நடந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். செயல் தலைவர் செல்வநாதன் சங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில்,  புதுச்சேரி விற்பனை குழுவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அனைத்து தினக்கூலி ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.  7வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை  நிரப்ப வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது.
பொருளாளர் பழனிராஜா நன்றி கூறினார்.

