ADDED : ஆக 16, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் கூட்டு போராட்டக்குழுவின் பொதுக்குழு கூட்டம் அரசு ஊழியர் சம்மேளனத்தில் நடந்தது.
போராட்டக்குழு ஆலோசகர் ஆனந்த கணபதி தலைமை தாங்கினார். கூட்டத்தில், நிர்வாகிகள் வேளாங்கண்ணிதாசன், கலியபெருமாள், மூவேந்தன், கிருஷ்ணமூர்த்தி, முருகையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு பென்ஷன், பணபலன்கள் மற்றும் சம்பளத்தை அரசே நேரடியாக வழங்க நடவடிக்கை எடுத்து ஆணை பிறப்பிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 21ம் தேதி உள்ளாட்சித்துறை அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.
