/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லோக்சபா தேர்தலில் பொது வேட்பாளர் பொதுநல அமைப்பினர் ஆலோசனை
/
லோக்சபா தேர்தலில் பொது வேட்பாளர் பொதுநல அமைப்பினர் ஆலோசனை
லோக்சபா தேர்தலில் பொது வேட்பாளர் பொதுநல அமைப்பினர் ஆலோசனை
லோக்சபா தேர்தலில் பொது வேட்பாளர் பொதுநல அமைப்பினர் ஆலோசனை
ADDED : மார் 18, 2024 03:27 AM

புதுச்சேரி : புதுச்சேரி லோக்சபா தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக பொதுநல அமைப்புகள் ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.,நேரு தலைமையில் பொது நல சமூக அமைப்புகளில் லோக்சபா தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் நேரு எம்.எல்.ஏ., பேசியதாவது:முதல்வர் ரங்கசாமி முழுக்க முழுக்க பா.ஜ.,வின் கைப்பாவையாக மாற்றப்பட்டுள்ளார்.
கூட்டணிக் கட்சியாக இருக்கும் முதல்வரை மதிக்காமல் தன்னிச்சையாக மூன்று நியமன எம்.எல்.ஏக்களை பா.ஜ., நியமித்தது.
மேலும் ராஜ்ய சபா எம்.பி., பதவியையும் அபகரித்தது. இப்போது லோக்சபா தேர்தலிலும் பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களை கொண்ட என்.ஆர். காங்., வேட்பாளரை நிறுத்தவிடாமல் பா.ஜ., கட்சி வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு அழுத்தம் கொடுத்துப் பெற்றுள்ளது. இப்படி மாநில மக்களின் உணர்வுகளை மதிக்காமல் முதல்வரை அடிமையாக்கி வைத்திருப்பதை மாநில மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் புதுச்சேரி அரசியலில் வெற்றிடம் இருப்பதை மக்கள் உணருகிறார்கள்.
அதன் அடிப்படையில் லோக்சபா தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோணத்தில் பொதுநல அமைப்புகளின் கருத்து கேட்கப்பட்டது.முடிவு பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

