நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியாங்குப்பம் ராம்சிங் வீதியை சேர்ந்தவர் சாந்தி மகள் சங்கீதா,19; சாந்தி பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார்.
சங்கீதா, அரியாங்குப்பத்தில் உள்ள அவரது சித்தி அலெக்ஸ் சந்திரா வீட்டில் வசித்து வந்தார்.
அலெக்ஸ் சந்திரா, சங்கீதாவை வீட்டில் விட்டுவிட்டு, குடும்பத்துடன் திருச்செந்துார் கோவிலுக்கு சென்றார். கடந்த 11ம் தேதி வீட்டிற்கு வந்தபோது, சங்கீதாவை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அலெக்ஸ் சந்திரா கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

