ADDED : பிப் 17, 2025 06:12 AM

புதுச்சேரி; லாஸ்பேட்டையில் இறந்த மூதாட்டியின் கண்களை, அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டை தாகூர் நகர் மெயின் ரோடு, சக்ரா அப்பார்ட்மெண்டில் வசித்து வந்தவர் தளிஞ்சம்மாள், 86. இவர் வயது மூப்பு காரணமாக, நேற்று முன்தினம் இறந்தார்.
இதையடுத்து, இவரது கண்களை தானம் செய்ய மகன்கள் கணபதி, பஞ்சாட்சரம், சுப்புராயன், மகள்கள் ஜெயக்குமாரி, ராணி, வசுந்தரா தேவி மற்றும் குடும்பத்தினர் முன்வந்தனர்.
இதற்காக, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாக குழு உறுப்பினர் அய்யனாரை தொடர்பு கொண்டு, அவரது வழிகாட்டுதலின்படி, கண்களை தானம் செய்ய அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவர் அக் ஷய் தலைமையிலான செவிலியர்கள் மவுனிகா, செல்வக்கனி ஆகியோர் வீட்டிற்கு வந்து கருவிழிகளை சேகரித்தனர்.