/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜெர்மன் மாணவர்கள் கவர்னருடன் கலந்துரையாடல்
/
ஜெர்மன் மாணவர்கள் கவர்னருடன் கலந்துரையாடல்
ADDED : ஜன 10, 2026 05:42 AM

புதுச்சேரி: ஜெர்மன் நாட்டு மாணவர்கள், கவர்னரை சந்தித்து கலந்துரையாடினர்.
சர்வதேச கலாசார மற்றும் கல்வி பரிமாற்றத் திட்டத்தின் கீழ், இந்தியா வந்துள்ள ஜெர்மன் நாட்டு மாணவர்கள், நேற்று புதுச்சேரி லோக் நிவாசில் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து கலந்துரையாடினர்.
அப்போது, ஜெர்மனி மற்றும் இந்தியாவில் நடைமுறையில் உள்ள கல்வி முறை குறித்தும், கல்வியில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் குறித்தும் கலந்துரையாடினர்.
புதுச்சேரி, கல்வியில் முன்னோடி மாநிலமாக இருப்பதையும், படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள், சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும் அரசு கவனம் செலுத்தி வருவதையும் கவர்னர் எடுத்துரைத்தார்.

