/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் 59வது கிளை புதுச்சேரியில் திறப்பு
/
மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் 59வது கிளை புதுச்சேரியில் திறப்பு
மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் 59வது கிளை புதுச்சேரியில் திறப்பு
மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் 59வது கிளை புதுச்சேரியில் திறப்பு
ADDED : ஜன 10, 2026 05:41 AM

புதுச்சேரி: மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் 59வது கிளை புதுச்சேரியில் நேற்று திறக்கப்பட்டது.
ஆடவர் ஆடை விற்பனையில் முன்னணி வகித்து வரும் மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் தெனனிந்தியாவின் 59வது கிளை புதுச்சேரி, அண்ணா சாலையில் நேற்று திறக்கப்பட்டது. புதிய ேஷாரூமை, மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் உரிமையாளர் போத்திராஜ் திறந்து, குத்துவிளக்கு ஏற்றி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
விழாவில் எதிர்க்கட்சி தலைவர் சிவா, நேரு எம்.எல்.ஏ., புதுச்சேரி போத்தீஸ் பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த புதிய ேஷாரூமில் காட்டன் வேட்டிகள், பட்டு வேட்டிகள், சட்டைகள், குர்தா, காட்டன் பேப்ரிக்ஸ், லினன் பேப்ரிக்ஸ், திருமண ஆடைத் தொகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு உயர்தர ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் ஒரே இடத்தில் வாடிக்கையாளர்களுக்காக வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் நவீன பேஷனை கருத்தில் கொண்டு தரம், விலை மற்றும் தேர்வுகளில் தனித்துவம் கொண்டதாக இந்த ேஷாரூம் அமைக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் எம்.ஜி., ஒயின்ஸ் மணி, முத்து சில்க் ஹவுஸ் நமச்சிவாயம், ராம் சில்க்ஸ் நட்ராஜ், ராஜேஷ் பாலாஜி, அப்பு வெங்கடேஷ், அரவிந்த் வெங்கடாஜலபதி, ராஜேந்திராஸ் ராஜேந்திரன், ஓம்சக்தி சரவணன், சண்முகா ரெடிமேடு குகன், ஷப்னம் ஆசிக் பாய், ைஹ பேஷன் ரவி, வி.எஸ்.டிரேடர்ஸ் முருகவேல் மற்றும் வணிகர்கள், வாடிக்கையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
விழா ஏற்பாடுகளை மினிஸ்டர் ஒயிட் துணை பொது மேலாளர் துளசி ராஜன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

