sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆயிரம் வீடுகளுக்கு பரிசு தொகுப்பு

/

 சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆயிரம் வீடுகளுக்கு பரிசு தொகுப்பு

 சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆயிரம் வீடுகளுக்கு பரிசு தொகுப்பு

 சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆயிரம் வீடுகளுக்கு பரிசு தொகுப்பு


ADDED : டிச 15, 2025 06:09 AM

Google News

ADDED : டிச 15, 2025 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: எவர்கிரீன் நிறுவனம் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஆயிரம் வீடுகளுக்கு, பரிசு தொகுப்பு வழங்கும் பணியை, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் துவக்கி வைத்தார்.

பாகூர் கொம்யூன் பிள்ளையார்குப்பம் எவர்கிரீன் நற்பணி நிறுவனம், சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எதிர்வரும் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி, வீட்டிற்கு ஒரு மரம் வளர்போம், வீதியை பசுமையாக்குவோம், கடற்கரையோர மணல்மேடுகளை பாதுகாப்போம், பிளாஸ்டிக்கை தவிற்போம், தண்ணீர் சேமிப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுதிவருகிறது.

இதன்படி ஏம்பலம் தொகுதிபிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள 1000 வீடுகளுக்கு, புத்தாண்டு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், எவர்கிரீன் நிறுவனரும், புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலருமான ரமேஷ் கலந்து கொண்டு, அரிசி, சர்க்கரை, வெல்லம், காலெண்டர் உள்ளிட்டவைகள் கொண்ட பரிசுதொகுப்புகளை வீடு வீடாக சென்று வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், எவர்கிரீன் நிறுவன உறுப்பினர்கள், ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us