ADDED : ஏப் 15, 2025 04:30 AM

புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் தமிழ் புத்தாண்டு பரிசு தொகுப்பு வழங்கும் பணியினை முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் நேற்று துவக்கி வைத்தார்.
நெல்லித்தோப்பு தொகுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், தனது சொந்த செலவில் தமிழ் புத்தாண்டு பரிசு தொகுப்பு வழங்கும் துவக்க விழா நேற்று நடந்தது.
குயவர்பாளையம், பகத்சிங் வீதி, கிருஷ்ணர் கோவில் அருகே நடந்த விழாவிற்கு, முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு தமிழ்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, பரிசு தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்தார்.
இதில், முன்னாள் கவுன்சிலர் சதாசிவம், சுபதேவ் சங்கர், வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் சேகர், தம்பா, ஜெயராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, ஒவ்வொரு பகுதியாக முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் நேரடியாக சென்று அனைத்து குடும்பங்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்க உள்ளார்.