ADDED : ஜன 31, 2026 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினவிழா கடற்கரை சாலை, காந்தி திடலில் நேற்று மாலை நடந்தது.
விழாவிற்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அமைச்சர் தேனீ ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். சபாநாயகர் செல்வம் வா ழ்த்துரை வழங்கினார்.
விழாவில் குழந்தைகள் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் யாசின் முகமது சவுத்ரி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனா மற்றும் துறை அதிகாரிகள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

