ADDED : செப் 04, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வலிப்பு ஏற்பட்டு சிறுமி பரிதாபமாக இறந்தார்.
உறுவையாறு, புதுநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி; கூலித்தொழிலாளி. இவரது மகள் மஞ்சு, 11. இவருக்கு சிறுவயதில் இருந்து வலிப்பு நோய் இருக்கிறது. இதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், நள்ளிரவு 1:30 மணியளவில் கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
அவரது தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.