/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேலி தாண்டிய வெள்ளாடுகள் காங்., கட்சியில் கடும் எதிர்ப்பு
/
வேலி தாண்டிய வெள்ளாடுகள் காங்., கட்சியில் கடும் எதிர்ப்பு
வேலி தாண்டிய வெள்ளாடுகள் காங்., கட்சியில் கடும் எதிர்ப்பு
வேலி தாண்டிய வெள்ளாடுகள் காங்., கட்சியில் கடும் எதிர்ப்பு
ADDED : அக் 13, 2024 07:26 AM
புதுச்சேரியில் ஆளும் பா.ஜ., மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் காங்., கட்சியில் இணைவதற்கு மூத்த காங்., நிர்வாகியிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த பேச்சுவார்த்தை, சில தினங்களுக்கு முன்பு காங்., அலுவலகத்தில் நடந்த மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கசிந்தது. அப்போது கூட்டத்தில் இருந்த சம்மந்தப்பட்ட தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கடும் கோபத்தில் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் கடுப்பான மாஜி முதல்வர், மாற்று கட்சியில் இருந்து குறிப்பாக காங்., கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் உள்ள எந்த எம்.எல்.ஏ.,வையோ, நிர்வாகிகளையோ காங்., கட்சியில் சேர்ப்பதற்கு இங்குள்ள மூத்த தலைவர்கள் எவ்வித முயற்சிகளிலும் ஈடுபட வேண்டாம். அதனை கட்சி தலைமை பார்த்துக் கொள்ளும்.
மீறினால் மாற்று கட்சியினரை, காங்., கட்சியில் சேர்க்க முயற்சிக்கும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்தார். அதன் பிறகே கூட்டத்தில் சலசலப்பு குறைந்து அமைதி ஏற்பட்டது.