ADDED : அக் 24, 2026 11:47 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரத்தில் சாமி கும்பிடும்போது குழந்தையின் கையில் இருந்த ஒரு சவரன் தங்க காப்பு திருடிய மரம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரம் பஸ் நிலையம் அருகே உள்ள கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் நேற்று (அக்.,23) இரவு, அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்தபோது, அவரது குழந்தை கையில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்க காப்பு காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் ராஜ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
